அர்ஜென்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவுக்குச் செல்வதற்கு முன்பு 1995 முதல் 2000 வரை அர்ஜென்டினா கிளப் நிவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்க்கா விளையாடினார். நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் அணிக்காக விளையாடினார்.
நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் அணி, உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் முதல் பேட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், "நீங்கள் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து தெரியுமா? என்று செய்தியாளர் கேட்கிறார். அதற்கு மெஸ்ஸி, இல்லை என்று பதிலளிக்கிறார்.
பின்னர் இந்த ஆட்டத்தில் நீங்கள் பதிவு செய்த கோல்கள் குறித்து கேட்டபோது, "இரண்டாவது கோல். அந்த கோலை ரோஸோ கிரிக்கினி லூகாஸிடம் தள்ளிவிட, லூகாஸ் என்னிடம் பாஸ் செயய் நான் கோல் அடித்தேன்" என்கிறார் மெஸ்ஸி.
இந்த இரு கோல்களையும் யாருக்கு சமர்ப்பிக்கிறீர்கள் என்று கேட்டபோது, "எனது தந்தை, எனது மாமா, மற்றும் எனது குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும், என்னை யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 2 முறை கோல்டன் பாலை வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார்.
92 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், சிறந்த வீரருக்கான கோல்டன் பாலை ( தங்க பந்து) இரு முறை வென்ற ஒரே வீரர் மற்றும் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தங்கபந்து வென்று சாதனை படைத்திருந்தார்.
உலகக்கோப்பை கால்பந்தை அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஒரே காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி இதுவரை கால்பந்தில் படைக்காத சாதனைளே இல்லை என்று சொல்லுமளவிற்கு சிறந்த வீரருக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளை படைத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 4 உலகக்கோப்பையிலும் சேர்த்து 6 கோல்கள் மட்டுமே அடித்திருந்த மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையில் 7 கோல்களை விளாசி மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மெஸ்ஸியின் இத்தனை ஆண்டுகால கால்பந்து சாதனைகளுக்கே கிரீடமாக அமைந்திருபக்கும் உலகக்கோப்பையின் மின்னும் வைரக்கல்லாய் மாறியுள்ளது இந்த தங்க கால்பந்து.