ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி:


ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நேற்று (நவம்பர் 29) சிலி தலைநகர் சான் டியாகோவில் தொடங்கியது. டிசம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்களான நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் 4 வது இடத்தை கைப்பற்றிய இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் இந்த ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.


அதில்,  4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற
அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.


இந்த முறை நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சி பிரிவில் இடம்பிடித்திருக்கிறது.  அதேபோல், ஜெர்மனி பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் தான் இருக்கின்றனர். 


வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி:



அதன்படி, நேற்று (நவம்பர் 29) பிரமாண்டமாக தொடங்கிய இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் கனடா அணியுடன் மோதியது. ப்ரீத்தி தலைமையிலான இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. முன்னதாக, இந்திய அணி தரப்பில் மும்தாஜ் கான் 4 கோல்களும் , அன்னு 3 கோல்களும் அடித்தனர். அதேபோல், தீபிகாவும் 3 கோல்களை அடிக்க நீலம் மற்றும் டிபி மோனிகா டோப்போ தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.


ஜெர்மனியை எதிர்கொள்ளும் இந்தியா:


டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.  இதில் ஜெர்மனி முன்னாள் சாம்பியன் என்பதால் இந்த முறை எப்படியும் ஜெர்மனியை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை இந்திய அணி:


கோல்கீப்பர்கள்: குஷ்பு, மாதுரி கிண்டோ


டிஃபெண்டர்கள்: நீலம், ப்ரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி


Midfielders:  மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல் (துணை கேப்டன்)


Forwards : சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ, சுனெலிதா டோப்போ


Standbys: தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா


எப்படி பார்க்கலாம் :


இந்த போட்டிகளை ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக பார்க்கலாம்.