கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லீக், நாக் அவுட் மற்றும் காலிறுதிப் போட்டிகள் நிறைவு பெற்று ஆட்டம் அரையிறுதிக்கு சென்றுள்ளது. கத்தார் நாட்டின் லூசையில் நகரில் உள்ள லூசையில் ஐகானிக் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நேருக்கு நேர் மோதின.
முன்னதாக, இந்த போட்டியில் பெரும்பாலும் அர்ஜெண்டினா அணியே வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்து வரும் வேளையில், நமது ஏபிபி நாடு சார்பாக ட்விட்டரில் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக செல்லப்போவது யார்..? என்று வாக்கெடுப்பு நடத்தியது.
ஏபிபி நாடு நடத்திய வாக்கெடுப்பில், உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டி – ஜெயிக்கப்போவது யார்..? என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என்று 77.3 சதவீதம் பேரும், குரோஷியா வெற்றி பெறும் என்று 22.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அர்ஜெண்டினா அணி பலமான அணியாக கருதப்பட்டாலும், குரோஷியா அணி காலிறுதியில் பலமிகுந்த பிரேசில் அணியையே வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல, பலம் மிகுந்த அர்ஜெண்டினா அணி லீக் போட்டியில் சவுதி அரேபியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால், அர்ஜெண்டினா அணி குரோஷியாவை குறைத்து மதிப்பிடாமல் முழு பலத்துடன் ஆக்ரோஷமாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.
குரோஷியா அணி கடந்த முறையே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்பதால் இந்த முறையும் வெற்றி பெற்று, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற துடிக்கும் என்பதால் இன்று நள்ளிரவு நடக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தளிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அதற்கேற்ப நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில், நமது ஏபிபி நாடு நடத்திய டிவிட்டர் கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் வாக்களித்த படியே, அர்ஜென்டீனா அணி மிகச் சிறப்பாக விளையாடி, 3-0 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. நாம் நடத்திய டிவிட்டர் கருத்துக்கணிப்பில், கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதற்கேற்ப தற்போது முடிவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ronaldo Girlfriend: "நாங்கள் தோற்கவில்லை..." போர்ச்சுக்கல் மேனஜரை வறுத்தெடுத்த ரொனால்டோ காதலி...!
மேலும் படிக்க: FIFA : ரொனால்டோ அவுட், தொடருமா மெஸ்ஸியின் கனவு?.. அரையிறுதியில் குரோஷியாவுடன் இன்று மோதல்