FIFA WORLDCUP 2022: இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட இறுதிப்போட்டிகள் பற்றி இங்கு காணலாம்.
அர்ஜெண்டினா - பிரான்ஸ்:
கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. உலகக்கோப்பை தொடரில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்ட, கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனிடையே, நாக்-அவுட் சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றியை பதிவு செய்து, முன்னாள் சாம்பியனான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், நடப்பு சாம்பியனான பிரான்சு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும்.
1930 முதல் 2018 வரை மொத்தம் 21 உலகக்கோப்பை நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெறுவது 22வது உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி என்றாலே அனைவருக்கும் ஆவலும், பரபரப்பும் அதிகமாகிவிடும். அதுவும் இறுதிப்போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலும் உலகின் பலகோடிக்கணக்கான கண்கள் உற்றுநோக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி இறுதிப்போட்டியில், அடிக்கப்பட்ட அதிகப்படியான கோல்கள் அடிக்கப்பட்ட சில போட்டிகள் குறித்து இங்கு காணலாம்.
1. பிரேசில் - சுவீடன் (1958) 5 - 2 (பிரேசில் வெற்றி)
2. உருகுவே - அர்ஜெண்டினா (1930) 4 - 2 (அர்ஜெண்டினா வெற்றி)
3. இத்தாலி - ஹங்கேரி (1938) 4 - 2 (இத்தாலி வெற்றி)
4. இங்கிலாந்து - ஜெர்மனி 4 - 2 (இங்கிலாந்து வெற்றி)
5. பிரான்ஸ் - குரோஷியா 4 - 2 (பிரான்ஸ் வெற்றி)