மதுரை அமெரிக்கன் கல்லூரி கலையரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்...,” யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் நமது கலாச்சாரம். சிறுபான்மையினர் ஆணைய வாரியத்தலைவர் பல கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார். நிதியமைச்சரான எனக்கு கல்வி திறமை இருந்தாலும் முதலமைச்சர் தான் முதலமைச்சர் ஊக்கமும் ஆக்கமும் தருகிறார், கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன். சைவ வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன் நான், ஜனநாயகப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சிறும்பான்மையினர் நலன் காப்பது கடமையாகும். என் குடும்பத்திற்கும், மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு எந்தளவிற்கு வரலாறு உள்ளதோ,
அதே அளவிற்கு என்னுடைய ஆதரவும், ஒத்துழைப்புகளுக்கும் எல்லா வழிபாடு் நிகழ்ச்சிகளும் உண்டு. இப்தார் நிகழ்ச்சிகளில் ஆண்டுதோறும் கலந்துகொள்வது எனது கடமை மற்றும் பெருமையாக கருதுகிறேன். நேற்று கூட கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பழனிக்கு சென்று வழிபட்டு திரும்பினேன்” என பெருமையாக தெரிவித்தார்.
மேடையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்..,” அரசமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு உள்ளது. பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு அரணாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்களிடையே சாதியால், மதத்தால் பிரிவினையை ஏற்படுத்தி விடலாம் என நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பது தான் திமுக கொள்கை” அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்