22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


பிரான்ஸ்- போலந்து மோதல்:


முதல் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்த முதல் அணியானது.
இதையடுத்து, அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.


இதையடுத்து, சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தும்-அர்ஜென்டினாவும் மோதுகின்றன. இன்றைய மற்றொரு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸும் போலந்தும் மோதுகின்றன.
குரூப் டி பிரிவில் இடம்பெற்ற பிரான்ஸ் அணி, 6 புள்ளிகளைப் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.


நாக் அவுட் சுற்று:


குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள போலந்து அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடம்பிடித்து நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பிரான்ஸும், போலந்தும் வித்தியாசமான ஸ்டைலில் விளையாடக் கூடிய அணிகள் ஆகும்.
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி தாக்குதல் பாணி ஆட்டத்தை விரும்பும். ஆனால், போலந்து அணி தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.






இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை இரு அணிகளும் 16 முறை சந்தித்துள்ளன. அதில் பிரான்ஸ் 8 முறை வெற்றியும், 3 முறை தோல்வியும், 5 ஆட்டங்களில் டிராவும் கண்டன.


IND vs BAN 1st ODI LIVE: வங்கதேச கேப்டனின் விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்


எதிர்பார்ப்பு


பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரெளட் ஒரு கோல் அடித்தால், பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்.  இன்று இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. அல் துமாமா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.


போலந்து அணியின் தடுப்பு ஆட்டம் பிரான்ஸிடம் வேலைக்கு ஆகாது என்பதே கால்பந்து ரசிகர்களின் கணிப்பாக உள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.