டி குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான 2024 FIDE உலக சாம்பியன்ஷிப்பை சிங்கப்பூர் நடத்தும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு இன்று (ஜூலை 1) அறிவித்துள்ளது.


உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024:



கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் டி குகேஷ் வென்றிருந்தார். அவரது இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் குகேஷ் விளையாடவுள்ளார்.


முன்னதாக இந்த போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பங்களை இந்தியா பெற்றதாகவும் அதன்படி செஸ் சாம்பியன்ஸிப் போட்டியை டெல்லி, சென்னை, குஜராத்தில் நடத்துவதற்கு கேண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் கூறியிருந்தார்.  அதேபோல் இந்த தொடரை நடத்த விரும்பும் நாடுகளும் விண்ணப்பிக்கலாம் என்று  உலக செஸ் சம்மேளனம் தெரிவிருந்த நிலையில் பல நாடுகளும் விண்ணப்பம் செய்தன.


சிங்கப்பூரில் இறுதிப் போட்டி:


இந்நிலையில் தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூலை 1) வெளியாகியுள்ளது. அதன்படி சிங்கப்பூரில் இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.





இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!


மேலும் படிக்க: Watch Video: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக மகளிர் அணி வெளியிட்ட வைரல் வீடியோ!