உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணியை வீடியோ வெளியிட்டு மகளிர் அணியினர் வாழ்த்தியுள்ளனர்.


சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:


கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இந்த அணியின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த நாடும் கொண்டாடி வருகிறது. இச்சூழலில் தான் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மகளிர் கிரிக்கெட் அணி முக்கியமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளது.


இந்திய மகளிர் அணி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றது. அதன்படி இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டியை கைப்பற்றியது. அதேபோல் டி20 போட்டியையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய  மகளிர் அணி உள்ளது. 


மகளிர் அணி வெளியிட்ட வீடியோ:






இந்நிலையில் தான் இந்திய ஆண்கள் அணியை மகளிர் அணியிடன் வாழ்த்தியுள்ளனர். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இது தொடர்பான வாழ்த்துச் செய்தியை அவர்கள் பகிர்ந்துள்ளனர். முன்னதாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோரை வாழ்த்தினார்.


இந்திய அணி இன்று உலகக் கோப்பையுடன் தாய்நாடு திரும்புவதாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் நிலவி வரும் வானிலை காரணமாக இந்தியாவிற்கு கிளம்புவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒரு வேளை இந்திய கிரிக்கெட் அணி நாளை டெல்லி வந்தால் பிரதமர் மோடியை நேரடியாக சென்று பார்த்து உலகக் கோப்பையுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்து.


மேலும் படிக்க: Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்


மேலும் படிக்க: Team India Barbados: இந்திய அணிக்கு என்ன ஆச்சு? கோப்பையை வென்ற பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் பார்படாஸில் தவிப்பு