செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? எப்படி தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்?
சாஹஜ் கோரோவர்:
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த சாஹஜ் கோரோவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் டெல்லியில் 1996ஆம் ஆண்டு பிறந்தவர் சாஹஜ் கோரோவர். இவர் 2003ஆம் ஆண்டு முதல் செஸ் விளையாட்டு போட்டியில் தீவிரமாக பங்கேற்று வந்தார்.
2005ஆம் ஆண்டு யு-10 உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக மாஸ்டர் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு இவர் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். 2012ஆம் ஆண்டு இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார். தன்னுடைய 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார்.
மேலும் படிக்க:செக்மேட் 4: சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் வர காரணம் என்ன? - நடந்த கதை இதுதான்!!
தென்னாப்பிரிக்காவில் சாஹஜ்:
இதைத் தொடர்ந்து இவர் 2013ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதன்பின்னர் இந்தியாவிலும் பல்வேறு செஸ் தொடர்களில் பங்கேற்று வந்தார். சர்வதேச செஸ் தரவரிசையில் 2504 புள்ளிகளையும் பெற்றார். 2018ஆம் ஆண்டு இவர் தன்னுடைய பட்டப்படிப்பிற்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு உள்ள நெல்சம் மண்டேலா பல்கலைக் கழக்கத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக சாஹஜ்:
2018ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் பல்வேறு செஸ் தொடர்களில் இவர் பங்கேற்று வந்தார். இதன்காரணமாக பல்வேறு முன்னணி வீரர்களுடன் இவர் விளையாடியுள்ளார். இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்காவின் செஸ் சங்கம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இவரை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பொறுப்பிற்கு கேட்டுள்ளனர்.
மேலும் படிக்க:செக்மேட் 3: இன்று சர்வதேச செஸ் தினம்! சதுரங்கா டூ நவீன செஸ்.. செஸ் விளையாட்டின் வரலாறு!
தென்னாப்பிரிக்க செஸ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சாஹஜ் அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக உள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு இந்தியர் ஒருவர் கேப்டனாக உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்