இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தது எப்படி? அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்தது எப்படி தெரியுமா?


ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் ஒலிம்பியாட்:


கொரோனா பரவல் காரணாக 42 மற்றும் 43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் ரஷ்ய திடீரென்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. இதன்காரணமாக ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் அதிருப்தி உடன் இருந்தனர். மேலும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளையும் விதித்து வந்தனர். அத்துடன் ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளையும் புறக்கணிக்க தொடங்கினர். இதன்காரணமாக சர்வதேச செஸ் அமைப்பு ரஷ்யாவிலிருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டது. 




மேலும் படிக்க:செக்மேட் 3: இன்று சர்வதேச செஸ் தினம்! சதுரங்கா டூ நவீன செஸ்.. செஸ் விளையாட்டின் வரலாறு!


இந்தியாவிற்கு வந்தது எப்படி?


சர்வதேச செஸ் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை எடுத்தவுடன் இந்திய செஸ் சங்கம் இதை இந்தியாவில் நடத்த பணிகளை மேற்கொண்டது. இந்தியாவில் குஜராத், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஒரு இடத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த திட்டமிட்டது. எனினும் மிகவும் குறைவான காலத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதால் அதை எப்படி நடத்த முடியும் என்று ஆலோசனை செய்து வந்தது. 




தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?


இந்திய செஸ் சங்கத்தின் தலைவர் பரத் சிங் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீனாந்த் நாராயணனை தொடர்பு கொண்ட இதுகுறித்து பேசியுள்ளார். அவர் உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுள்ளார். இந்தப் போட்டியை நடத்த சுமார் 75 கோடி ரூபாய் வரை நிதி தேவைப்பட்டது. எனினும் அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதற்கான ஒப்புதலை வழங்கினார். ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு தொகை வழங்கி கௌரவப்படுத்தியிருந்தார். ஆகவே அவர் விளையாட்டு போட்டிகளுக்கு ஆதரவாக இருப்பார் என்று கருதப்பட்டது. அதற்கேற்ப உடனடியாக செயல்பட்டு தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடத்தும் பணிகளை மேற்கொள்ளும் முடிவை எடுத்தார். 


அவர் கொடுத்த ஒப்புதலை அடுத்து செஸ் சங்கத்தின் தலைவர் பரத் சிங் இந்தியா செஸ் ஒலிம்பியாட் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு இடம் பெற உள்ளது பெருமையாக அமைந்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண