செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்காக தலைநகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சர்வதேச செஸ் தினம் என்றால் என்ன? செஸ் விளையாட்டின் வரலாறு என்ன?


செஸ் வரலாறு:


600ஆம் நூற்றாண்டில் செஸ் விளையாட்டு போட்டி சதுரங்கா என்ற இந்திய விளையாட்டிலிருந்து அறிமுகமானது. இது அங்கிருந்து ஆசிய, ஐரோப்பா நாடுகளுக்கு பரவியது. 16ஆம் நூற்றாண்டில் இது நவீன செஸ் போட்டியாக உருவெடுத்தது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மத போதகர் ரூய் லோபஸ் முதல் செஸ் மாஸ்டராக 1561ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அப்போது முதல் செஸ் விளையாட்டு வளர தொடங்கியது. 




மேலும் படிக்க:செக்மேட் 1: செஸ் ஒலிம்பியாடும்... வரலாறு காணாத செஸ் வளர்ச்சியும்..




19ஆம் நூற்றாண்டில் செஸ்:


1800களில் செஸ் விளையாட்டு அபரீதமான வளர்ச்சியை கண்டது. முதல் முறையாக செஸ் போட்டிக்கான நேரம் ஒழுங்குமுறை வந்தது. இதற்கு முன்பாக ஒரு செஸ் போட்டி சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்று வந்தது. அதை முறைப்படுத்த செஸ் க்ளாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல தொடர்கள் நடத்தப்பட்டன. 1886ஆம் ஆண்டு ஸ்டெயினிட்ஸ் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். அந்தப் பட்டத்தை அவர் 1894ஆம் ஆண்டு வரை தன் வசம் வைத்திருந்தார்.




இவரை லாஸ்கர் 1894ஆம் ஆண்டு தோற்கடித்து இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1920களில் நவீன செஸ் போட்டியின் வளர்ச்சி நன்றாக அமைந்தது. இதன்காரணமாக  1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது. எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொழில்முறை வீரர்கள் மற்றும் கேளிக்கைக்காக விளையாடும் நபர்களுக்கு இடையே வேறுபாடு அறிய முடியாது என்பதால் செஸ் போட்டி அப்போது ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. 


சர்வதேச செஸ் நாள்:


இதைத் தொடர்ந்து 1924ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டி அப்போது அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக அறிவிக்கப்பட்டது. 




மேலும் படிக்க: செக்மேட் 2: சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை உடைத்த முதல் அமெரிக்க ஜாம்பவான்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண