வாசிம் அக்ரம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான். பாகிஸ்தானின் கிரிக்கெட் நட்சத்திரமான இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரின் கனவு நாயகன். தேச எல்லைகள் கடந்து அவர் கொண்டாடப்பட்டார்.


2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் முதன்முதலில் போதைக்கு அறிமுகமானதாகவும். 2009ல் தனது மனைவி ஹூமா இறந்த பின்னர் அந்தப் பழக்கத்தை கைவிட்டதாகவும் அவர் எழுதிய சுயசரிதை நூலில் எழுதி இருந்தார். அந்த புத்தகம் வெளியானபோது மிகப்பெரிய பரப்பரப்பு ஏற்பட்டது. 


இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசின் அக்ரமின் மகன் தஹ்மூர் அக்ரம் MMA (Mixed martial arts) என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்பு கலை வீரராக இருந்து வருகிறார். இந்த MMA அமெரிக்காவில் நடைபெறும் புகழ்பெற்ற குத்து சண்டைகளில் ஒன்று.










பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உங்கள் மகன் தைமூர் கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வாசிம் அக்ரம், “"என் மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார், அங்கு கிரிக்கெட் அதிகம் இல்லை, எப்படியும், என் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ நான் உரிமை அளித்துள்ளேன். அவர் ஒரு குத்து சண்டை வீரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது கண்டிப்பாக நடக்கும்.” என்று தெரிவித்தார். 


எல்லா காலத்திலும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் வாசிம் அக்ரம் 1966 ஆம் ஆண்டு லாகூரில் பிறந்தார். புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யவும், பழைய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவும் அனுபவசாலி தனது திறமைக்கு பெயர் பெற்றவர். அக்ரமின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அழைக்கப்படும் இந்த வேகப்பந்து வீச்சாளர் பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.


56 வயதான வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 414 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி 502 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி டெஸ்டில் ஒரு இரட்டை சதம், 3 சதம், 7 அரைசதம் அடித்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 257 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 6 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்களை குவித்துள்ளார்.