ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை பிசிசிஐ செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், ஒவ்வொடு அணியும் டீம் ஜெர்ஸியை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அணியப்போகும் ஜெர்ஸி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை பெரிதாக கவரவில்லை. பெரும்பாலானோர் பழைய ஜெர்ஸியே சிறந்தது என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி அணிந்த ஜெர்ஸிகள் பற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.
உங்களது ஃபேவரைட் ஜெர்ஸியை கமெண்ட் செய்யவும்
2021 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
2017 - 2021 டி-20 உலகக்கோப்பைகளில் இந்திய அணி ஜெர்ஸிகள்:
2016 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்ஸிகளில், காலரை மாற்றி வடிவமைக்கப்பட்ட உலகக்கோப்பை ஜெர்ஸி இந்த சீசனில்தான்
2014 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
2014-ம் ஆண்டு மீண்டும் டார்க் ப்ளே தீமிற்கு சென்றது இந்திய அணி
2012 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
2012-ம் ஆண்டு மீண்டும் லைட் ப்ளூ ஜெர்ஸியை தேர்வு செய்தது இந்திய அணி. இது 2007, 2010 ஜெர்ஸிகளின் ப்ளூ நிறத்திற்கு நடுவே, கொஞ்சம் லைட், கொஞ்சம் டார்க் கலரில் இருந்தது.
2009, 2010 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
இந்த ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில், லைட் ப்ளூ நிறத்தில் டார்க் ப்ளூ நிறத்துக்கு ஜெர்ஸி மாற்றப்பட்டது. எனினும் ஒரு விண்டேஜ் ஃபீல் தரும் இந்த ஜெர்ஸிகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் லைக் செய்தனர்.
2007 டி-20 உலகக்கோப்பை - இந்திய அணி ஜெர்ஸி
அறிமுக உலகக்கோப்பை தொடரில் லைட் ப்ளூ ஜெர்ஸியில் களமிறங்கிய இந்திய அணி, அந்த சீசனில் கோப்பை தட்டிச் சென்றது. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட ஜெர்ஸிகளில், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜெர்ஸி இது என சொல்லலாம்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
டி-20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி விவரம்:
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன்,ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கிரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார்.
பேக்-அப் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர், அக்சர் பட்டேல்
ஐபிஎல் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அணிகளில் சில மாற்றங்கள் செய்து கொள்ள ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக ஷர்தல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ, அக்டோபர் 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. முதல் 15 வீரர்களில் இடம்பெற்று இருந்த அக்ஷர் பட்டேல் தற்போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்