ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இன்று (அக்டோபர் 5) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதனமான ‘நரேந்திர மோடி மைதனத்தில்’ தொடங்கியது.
இச்சூழலில் , 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரின் முதல் லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் லீக் போட்டியான இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
நரேந்திர மோடி மைதானம்:
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதனாத்தில் மொத்தம் 1.30 லட்சம் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. எனவே முதல் லீக் போட்டியை இந்த மைதானத்தில் தான் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்து அதன்படி நடத்தி வருகிறது.
முன்னதாக இந்த லீக் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்று குஜராத் கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்த சூழலில், இன்றைய போட்டியில் மைதானம் வெறிச்சோடி கணப்படுவது சமூகவலைதளவாசிகளின் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான எக்ஸ் பக்கத்தில், ராஜீவ் என்ற பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “புக்மைஷோ மற்றும் பிசிசிஐ டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்தது. நீங்கள் சொன்னபடி டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தது என்றால் ஏன் இன்றைய போட்டியில் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் மற்றொரு பயனர் ஒருவர் கிண்டலாக ஒரு பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து விட்டன என்றீர்கள்! இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் என்றும் கூறினீர்களே! ஆனால் யாருக்குத்தான் இந்த டிக்கெட்டுகளை விற்றீர்களோ என்று தெரியவில்லை?” என்று கிண்டல் செய்துள்ளார்.
அதேநேரம் ஒரு சிலர் உலகக்கோப்பையின் முதல் நாள் ஆட்டத்தை பார்ப்பதே ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் வேறு சிலர், மைதானம் மிகப்பெரியது அதனால் தான் கூட்டம் இல்லாதது போல் தெரிகிறது. நாம் மைதானத்தின் அளவை கொண்டுதான் கூட்டம் இருக்கிறாதா? இல்லையா? என்று கருத்துகளை கூறவேண்டும் என்றும், கூட்டம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இது இந்திய அணி விளையாடாத போட்டி என்பது தான். பாகிஸ்தான் இந்தியா மோதும் ஆட்டத்தின் போது பாருங்கள் அனல் பறக்கும் எனவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான்
முன்னதாக , வரும் அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் 12 வது லீக் ஆட்டம் இந்த நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெறுகிறது. எனவே கிரிக்கெட்டில் எதிர் தரப்பு நாடக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவதால் கண்டிப்பாக இந்த போட்டியின் போது மைதானம் நிரம்பும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க: Asian Games 2023: அபாரம்.. 19 வயது இந்திய வீராங்கனை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று அசத்தல்!
மேலும் படிக்க: ODI World Cup 2023: உலகக்கோப்பையின் முதல் அரைசதம்...! அதிரடி காட்டிய ஜோ ரூட்!