இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சென் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் தற்போது விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்து விளையாடி வருகிறார். சற்று முன்பு வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 85 ரன்கள் பின் தங்கியுள்ளது. 


இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து இன்னிங்ஸின் 69ஆவது ஓவரின் போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் தெர்டுமேன் திசையில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ரசிகர்கள் பகுதியில் இருந்து சிலர் பீர் பாட்டிலில் இருக்கும் கார்கை மைதானத்தில் அவரின் அருகே தூக்கி வீசினார்கள். இதில் ராகுலுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அந்த ஓவருக்கு பிறகு அடுத்த ஓவரில் அந்த இடம் அருகே அதிகளவில் கார்க்கள் கிடப்பது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 


வெளிநாடுகளில் இந்திய வீரர்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சீராஜ் மீது இனவெறி தாக்குதலை ரசிகர்கள் சிலர் நடத்தினர். இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்து இந்தியாவிடம் மன்னிப்பும் கேட்டது. அந்தவகையில் தற்போது மீண்டும் இங்கிலாந்தில் இந்த மாதிரியான தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:இந்திய அணியா? அப்போ அல்வா தான்.. தாண்டவமாடும் ஜோ ரூட்!