கஜகஸ்தானில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் பட்டம் வென்று சீன வீரர் டிங் லிரன் சாதனைப் படைத்துள்ளார். 


இந்த சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


14 சுற்றுக் கொண்ட தொடரில் இருவரும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று சமமான புள்ளிகள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டை பிரேக்கர் போட்டியில் டிங் லீரன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.