தடகள உலகில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமெண்ட் லீக் தொடர். இந்தத் தொடரின் ஒரு லீக் சுற்றுப் போட்டி நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில் ஈட்டி ஏறிதலில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் சாம்பியம் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்தப் போட்டியில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தால் நீரஜ் சோப்ராவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


 


இந்நிலையில் இந்தப் போட்டியில் கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அசத்தலாக ஈட்டி ஏறிந்தார். அந்த முதல் வாய்ப்பில் 89.94 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனையை படைத்தார். அத்துடன் அவருடைய பிந்தைய சாதனையை அவரே முறியடித்தார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் 84.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் 87.46 மீட்டர் தூரம் வீசினார்.


 






இதைத் தொடர்ந்து 4வது வாய்ப்பில் 84.77 மீட்டர் தூரமும், 5வது வாய்ப்பில் 86.67 மீட்டரும், கடைசி மற்றும் 6வது வாய்ப்பில் 86.84 மீட்டர் தூரமும் ஈட்டி ஏறிந்தார். இதன்மூலம் இந்த லீக் சுற்று போட்டியில் 89.94 என்ற சிறந்த தூரத்தை பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்தார். முதல் இடத்தை உலக சாம்பியன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் வீசினார். இதன்மூலம் டைமெண்ட் லீக் சுற்றில் நீரஜ் சோப்ரா 7 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பெற்றுள்ளார். டைமெண்ட் லீக் சுற்றின் இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெறும். 


 


இந்தப் புதிய தேசிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா, “இன்று நான் நிச்சயம் 90 மீட்டருக்கு மேல் வீசுவேன் என்று நினைத்தேன். எனினும் அது நடக்கவில்லை. மெல்ல மெல்ல என்னுடைய தூரம் அதிகரித்து வருகிறது. அது எனக்கு நல்ல விஷயம் தான்” எனத் தெரிவித்துள்ளார். 


 






நீரஜ் சோப்ரா அடுத்து வரும் 15ஆம் தேதி நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண