நாள்: 01.07.2022, வெள்ளிக்கிழமை 


நல்ல நேரம் :


மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 வரை


கௌரி நல்ல நேரம் :






 

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை




இராகு :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


சூலம் – மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது திறமை வெளிப்படும் நாள். விவேகத்துடன் செயல்படும் நாள். சாமர்த்தியமான செயல்பாடுகளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்தநாள் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொறுமையாக செயல்பட்டால் பெரிய பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வீண் வாக்குவாதம் கூடாது. குலதெய்வ வழிபாடு அவசியம். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும். நீண்டநாள் நீடித்து வந்த சிக்கல் தீர்வுக்கு வரும். மனதில் அமைதி குடிகொள்ளும். நண்பர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம் செல்வாக்கு அதிகரிக்கும். நன்மை பயக்கும் நாள். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு இன்பமான நாள் ஆகும். மனதிற்கு பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட தூரப்பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன் தொல்லை தீரும். பணவரவு, தனவரவு உண்டாகும். நம்பிக்கை பிறக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு இரக்க குணம் உண்டாகும். நல்லவர்களுடனான நட்பு கிட்டும். நீண்டநாள் குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீர்வுக்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் சுபகாரியப்பேச்சுக்கள் ஏற்படும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சற்று சிரமமான நாளாக அமையும். எம்பெருமானின் ஆசிர்வாதம் துணையிருப்பதால் நம்பிக்கையுடன் இந்த நாளை எதிர்கொள்ளுங்கள். குடும்பத்தில் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த சிக்கல் தீர்வுக்கு வரும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் ஈடுபட்டு வந்த முரண்பாடான சிக்கல்கள் முடிவுக்கு வரும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மறதி உண்டாகலாம். இந்த நாள் முக்கியமான விவகாரங்களை ஒத்திவைக்கலாம். வெளியூர் பயணம், முக்கிய சந்திப்புகளை மற்றொரு நாளுக்கு மாற்றுவது நல்லது. முக்கிய ஆவண விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் உண்டாகும். காதல் திருமணத்தில் கைகூடும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். உடல் உபாதை நீங்கும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இந்தநாள் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல்கள் கூடுதல் மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் வழி பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. 


மகரம் :


மகர ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு ஓய்வு கிட்டும். நீண்ட நாள் உழைப்பு, நீண்ட நாள் பிரயான களைப்பு நீங்க ஓய்வு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கலப்பேச்சுக்கள் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களது வாழ்க்கையில் புது முயற்சியை மேற்கொள்வீர்கள். தைரியமான முடிவு எடுத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர்கள் உடல்நலத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். சிவபெருமான் வழிபாடு சிந்தனையில் புதிய எண்ணத்தை தரும்.  


மீனம்:


மீன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பழம்பெரும் ஆலயத்திற்கு செல்வீர்கள். சிவனடியார்களுக்கு சிறப்பு செய்து பலன் பெறுவீர்கள். மனதில் குடிகொண்ட கவலை நீங்கும். புதிய வேலைவாய்ப்பு உண்டாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண