முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜூலை 1-ஆம் தேதி முதல் கவுண்டவுன் ஆரம்பித்து, கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் பிறந்தநாளை கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். நேற்று இரவு முதல் சமூக வலைதளத்தில் தோனி பர்த்டே கொண்டாட்டம், #HappyBirthdayMSD டிரெண்டாகி வருகின்றது.


சச்சின், விராட், ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தோனியின் 40-வது பிறந்தநாளுக்கு புகைப்படங்களை பதிவிட்டு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  தோனிக்கு குவிந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு இங்கே!