ரியல்மி நிறுவனத்தின்  துணை நிறுவனமான டிஸோ தற்போது மொபைல்போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக டிஸோ நிறுவனம் TWS இயர்பட்ஸ், ப்ளூடூத் பேண்ட் ஹெட்செட் உள்ளிட்ட சில ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஃபீச்சர் மொபைல் போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனை  தொடர்ந்து அந்த தகவலை டிஸோ உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது தனது புதிய மொபைல்போன்களை தற்போது ட்ஸோ சந்தைப்படுத்த உள்ளது. சற்றும் எதிர்பாராத மலிவு விலையில் டிஸோ ஸ்டார் 300 மற்றும் டிஸோ ஸ்டார் 500 என்ற இரண்டு ஃபீச்சர் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது .  இந்த இரண்டு மொபைல்போன்களும் T9 விசைப்பலகை மூலம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ,குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில்  இயக்கும் வசதிகளுடன் வெளியாகியுள்ளது.  நாளை முதல் (ஜூலை 8) பிளிப்கார்ட்  வர்த்தக தளம் வாயிலாக ஆடர் செய்து இந்த மொபைல்களை பெறலாம்.



டிஸோ ஸ்டார் 300  சிறப்பம்சங்கள் :


1.77 இன்ச் திரையுடன்  160x120 பிக்சல் ரெசலியூஷன் மற்றும்  QQVGA LCD ஸ்கிரீன் வசதியை கொண்டுக்கள்ளது.32MB ரேம் வசதியுடன்  32MB நினைவக திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தவிற மெமரி கார்ட் மூலம் நினைவக திறனை அதிகரித்துக்கொள்ளலாம். டிஸோ ஸ்டார் 300 , 26MHz  அளவிலான SC6531E பிராசஸர்  வசதியை கொண்டுள்ளது. இதில் இரண்டு சிம் ஸ்லாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.   0.08MB முதன்மை கேமரா வசதி, எஃப்.எம்.ரேடியோ வசதிம் பாடல்களை கேட்கும் எம்பி3 வசதி , ஹெட்செட் இணைக்கும் வசதி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இது தவிற ப்ளூட்டூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 2550 எம்.ஏ.ஹெச். பேட்டரி வசதி கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு சில நாட்கள் சார்ஜிங் தாங்கும்



டிஸோ ஸ்டார் 500 அம்சங்கள்:


2.8 இன்ச் திரையுடன்  320x240 பிக்சல் ரெசலியூசனுடன் QVGA LCD ஸ்கிரீனுடன் டிசோ ஸ்டார் 500  உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் 26MHz அளவு திறனுடைய SC6531E பிராசஸர் வசதியுடன் 2MB ரேம் மற்றும் 32MB நினைவக திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.  மொபைலின் பின்புறம் டார்ச் மற்றும் 0.3 எம்.பி முதன்மை கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 1900 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும்  
டிஸோ ஸ்டார் 300  இல் உள்ள அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இரண்டு வேரியண்ட்டும்  ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது.



இந்த இரண்டு மொபைல்போன்களும் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரானவை இல்லை என்பதால் இவற்றில் 2 ஜி தொழில்நுட்ப வசதி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ஜியோ அறிமுகப்படுத்திய ஃபீச்சர் மொபைல் போன்களில் 4ஜி இணைய வசதி கொடுக்கப்பட்டிருந்தன. ஜியோவை விட  சிறப்பான வசதிகளோடு  அறிமுகப்படுத்தியிருந்தாலும்,  4ஜி சேவை இல்லாமல் 2ஜி சேவை அளிக்கப்பட்டிருப்பது சற்று அதிருப்தி அளிப்பதாக உள்ளது.  பார்ப்பதற்கு கருப்பு , பச்சை , சில்வர் மற்றும் ஊதா உள்ளிட்ட நிறங்களில் சிறந்த ஃபினிஷிங் டச்சுடன் காணப்படுகிறது. விலையை பொறுத்தவரை  டிஸோ ஸ்டார் 300 ஆனது ரூ 1,299 க்கும், டிசோ ஸ்டார் 500 மாடல்  ரூ. 1,799 க்கும் விற்பனையாக உள்ளது.