பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான 11வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Continues below advertisement

மும்பையில் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான 11வது போட்டி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் நின்று நிதானமாக ஆடி 51 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அகர்வாலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் எடுத்த நிலையில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Continues below advertisement



கெயில் 11 ரன்களிலும் தீபக் 22 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் 5 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து 15 ரன்களை குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல் அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்திவி 32 ரன்களில் ஆட்டமிழக்க தவான் 49 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடித்து 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மார்க்கஸ் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் முறையே 27 மட்டும் 12 ரன்களை குவித்தனர். 


இறுதியில் 18.2 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டெல்லி அணி 198 ரன்கள் எடுத்து இந்த போட்டியை வென்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola