இதயத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவேண்டும் என்பதற்காக முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.



சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் முத்தையா. நேற்றைய தினம் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இலங்கையின் மலையக பகுதியான கண்டியைச் சேர்ந்தவரான முத்தையா முரளிதரன், தமிழகத்தின் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர், முரளிதரனின் மனைவி மதிமலர் ராமமூர்த்தி சென்னையை சேர்ந்தவர் என்பதும், மலர் மருத்துவமனையின் உரிமையாளர் ராமமூர்த்தியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.