2022 காமன்வெல்த் கேம்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் வெற்றியை பதிவு செய்தது. இன்று பர்மிங்காமில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் (NEC) நடந்த போட்டியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் எஸ் ரெட்டி ஜோடி பாகிஸ்தானின் எதிரணியை நேர் செட்களில் தோற்கடித்தது.
கலப்பு பாட்மிண்டன் போட்டிக்குப் பிறகு, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முராத் அலியை நேர் செட்களில் தோற்கடித்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்றார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, பாகிஸ்தானின் முன்னணி வீராங்கனை மஹூர் ஷாசாத்தை வீழ்த்தி, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வென்றார். பின்னர் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் சிராக் ஷெட்டி மற்றும் எஸ் ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 4-0 என இந்தியாவுக்கு முன்னேறியது.
அதேபோல், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் புல்லேலா ஆகியோர் மஹூர் ஷாஜாத் மற்றும் கஜாலா சித்திக்யாவை வீழ்த்தி இந்தியாவை 21-4 என வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தாஸ் அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்