கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 பழமையான கோவில்களில் புனரமைப்பு செய்ய தமிழக அரசு 5 கோடி 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்படும் எனவும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேட்டியளித்தார்.

 

நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் நாகர்கோவில் மாநகராட்சியில் 74 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. அந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அம்ரூத் திட்டத்தில் 296 கோடி ரூபாய்க்கான குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடைத் திட்டம் 17 வார்டுகள் முழுமையாக முடிந்துள்ளது. பல முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 8 நகர பூங்காக்களை மேம்படுத்த தலா 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

 

சாலையோரம் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு தங்குமிடம் அமைக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய மேயர், ஒரு ஆண்டுக்குள் நாகர்கோவிலை மாசில்லா மாநகராட்சியாக மாற்ற "என் குப்பை என் பொறுப்பு" திட்டத்தை விரிவு படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர் மக்கள் சாலையோரம் குப்பைகளை வீசி சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 



 

தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அதிக அளவில் அறநிலையத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் தான். திருக்கோவிலுக்காக 43.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 பழமையான கோயில்களை புனரமைக்க 5 கோடியே 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.இதேபோன்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடைகளில் ஆக்கிரமிப்பு சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு போன்றவை அனைத்தும் அகற்று உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.