பள்ளிகளில் இனி நோ ஸ்பெஷல் கிளாஸ் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர ஆர்வத்தினை தூண்டவும் இந்த முயற்சி என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இனி பள்ளி நாட்களைத் தவிர பள்ளிக்கு மாணவர்களை வரச் சொல்லக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. சமீப நாட்களாக பள்ளிகளில் படிக்கும் குறிப்பாக மேல்நிலை வகுப்பு படிக்கும் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு காரணம் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்து கொடுக்கப்படும், கல்வி சார்ந்த அழுத்தங்கள் தான் காரணம் என பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் கல்வியிலாளர்கள் தெரிவித்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள், தற்கொலைக்கு முன்பாக குழந்தைகள் எழுதி வைக்கும் கடிதங்கள் இருக்கின்றன.
இதற்கு முடிவு கட்டும் விதமாக பள்ளிக்கல்வித் துறை தற்போது ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது. பள்ளி செயல்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் என பள்ளிக்கு வரவழைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி செயல்படும் நாட்களான, திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே பள்ளிக்கு குழந்தைகளை வரவழைக்க வேண்டும். அது தவிர விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் பள்ளிக்கு குழந்தைகளை வரச் சொல்லக்கூடாது எனவும், அதேபோல், அரசு விடுமுறை நாட்ர்களிலும் பள்ளிக்கு வரச்சொல்லி குழந்தைகளுக்கு கல்வி என்றாலே மன அழுத்தம் நிறைந்தது போன்ற உணர்வினை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையின் அறிவுருத்தலின் பேரில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி நாட்களைத் தவிர, விடுமுறை நாட்களில் பள்ளிகள் செடல்படவில்லை. இதனை தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பள்ளுக்கு வரும் ஆர்வம் அதிகரிக்கும் எனவும், பள்ளிகளில் இருந்து கொடுக்கப்படும் கல்வி சார்ந்த அழுத்தங்கள் குறைந்து மாண்வர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பை, சமூக நல ஆர்வலர்கள் மற்றும் கல்வியிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்