Highest T20 Total:20 ஓவரில் 344 ரன்கள் - தகர்க்க முடியாத உலக சாதனை செய்த ஜிம்பாப்வே!

மு.வா.ஜெகதீஸ் குமார்   |  23 Oct 2024 07:38 PM (IST)

ஐசிசி டி20 டி20 உலகக் கோப்பை குவாலிஃபையர் குரூப் பி போட்டியின் போது ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 344/4 ரன்களை குவித்து டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற வரலாற்று சாதனையை செய்தது.

ஜிம்பாப்வே

ஐசிசி டி20 டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா குவாலிஃபையர் குரூப் பி போட்டியின் போது ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 344/4 ரன்களை குவித்து டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

ஐசிசி டி20 டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா குவாலிஃபையர் குரூப் பி போட்டியின் போது ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 344/4 ரன்களை குவித்து டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

டி20 உலகக் கோப்பை குவாலிஃபையர் போட்டி:

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான துணை பிராந்திய ஆப்பரிக்க குவாலிஃபையர் குரூப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற போட்டியில் காம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரைம் பென்னட் மற்றும் டி மருமணி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 19 பந்துகள் களத்தில் நின்ற டி மருமணி 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி 62 ரன்களை குவித்தார்.

புதிய வரலாறு படைத்த ஜிம்பாப்வே அணி:

பின்னர் வந்த டியோன் மைரிஸ் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அடுத்தாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா களம் இறங்கினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் கடைசி வரை களத்தில் நின்று 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களை பறக்க விட்டு 133 ரன்களை குவித்தார். ப்ரைன் பென்னட் 26 பந்துகள் களத்தில் நின்று 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்தார். ராயன் ப்ரூல் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என 25 ரன்கள் எடுத்தார்.

க்ளிவ் மடாண்டே 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என  53 ரன்களை குவித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஜிம்பாப்வே அணி 344 ரன்களை குவித்தது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்களை குவித்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது ஜிம்பாப்வே அணி.ஜிம்பாப்வே அணிக்காக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் ராசாதான். அதே போல் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணிகள்:

  • ஜிம்பாப்வே 344/4 vs காம்பியா - 2024
  • நேபாளம் 314/3 vs மங்கோலியா - 2023
  • இந்தியா 297/6 vs பங்களாதேஷ் - 2024
  • ஆப்கானிஸ்தான் 278/3 vs அயர்லாந்து - 2019
  • செக் குடியரசு 278/4 vs துருக்கி - 2019
  • மலேசியா 268/4 vs தாய்லாந்து - 2023
  • இங்கிலாந்து 267/3 vs வெஸ்ட் இண்டீஸ் - 2023
  • ஆஸ்திரேலியா 263/3 vs இலங்கை - 2016
  • இலங்கை 260/6 vs கென்யா - 2007
  • இந்தியா 260/5 vs இலங்கை - 2017
  • தென்னாப்பிரிக்கா 259/4 vs வெஸ்ட் இண்டீஸ் - 2023
  • செக் குடியரசு 258/2 vs பல்கேரியா - 2022

 

Published at: 23 Oct 2024 07:09 PM (IST)
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.