ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Continues below advertisement

கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது.

Continues below advertisement

டாஸ் வென்ற இந்திய அணி:

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்யும் ஜிம்பாப்வே அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிரட்டலான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.

 

இந்திய அணி பிளேயிங் லெவன்:

 சுப்மன் கில்(கேப்டன் ), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர் ), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது.

ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்:


வெஸ்லி மாதேவெரே, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா(கேப்டன்), டியான் மியர்ஸ், ஜோனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே(விக்கெட் கீப்பர் ), வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்வே, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

 

 
 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola