ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் சென்னை அணி நடப்புத் தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 


மும்பை, ப்ராபோர்ன் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.


ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக ஆடினார். அவர் 5 பந்தில் 1 சிக்ஸருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட்டானர். இதனால், 2 ஓவர்களுக்குள் பஞ்சாப் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.


இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் – லியாம் லிவிங்ஸ்டன் கூட்டணியில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆட தவான் நிதானமாக ஆடினார். லிவிங்ஸ்டன் அதிரடியால் பஞ்சாப் அணி 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. லிவிங்ஸ்டன் மைதானத்தில் நாலாபுறமும் பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசினார். அவருக்கு ஷிகர் தவானும் நல்ல ஒத்துழைப்பு அளிக்க பஞ்சாப் 10வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.  


தொடர்ந்து, அதிரடியாக ஆடிய லியாம் லிவிங்ஸ்டன் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 32 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். அந்த ஐந்து சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் இப்போது ஐபிஎல் 2022 இன் மிக நீண்ட சிக்ஸராக பதிவாகியுள்ளது.  லிவிங்ஸ்டோன்108 மீட்டர் அடித்த சிக்ஸர் மூலம் இந்த சீசனின் மிகப்பெரிய அதிகபட்ச சிக்ஸர் என்ற வீரர் என்ற சாதனையைப் பதிவு செய்தார். இந்த சிக்ஸரை அடித்த சிறிது நேரத்தில் லிவிங்ஸ்டன் எந்த ஆச்சரியமும் இல்லாமல் மீண்டும் 105 மீட்டர் நீளமான சிக்ஸரை அடித்து நொறுக்கினார்.






இந்தநிலையில், லிவிங்ஸ்டன் அடித்த இந்த 108 மீட்டர் நீளமான சிக்ஸர் நேற்று இரவு முழுவதும் ட்ரெண்டாகி வந்தது. அதேபோல், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது வர்ணனையாளராக இருந்து வரும்  ஆகாஷ் சோப்ரா லிவிங்ஸ்டன் அடித்த சிக்ஸர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், 100 மீட்டருக்கு மேல் கடந்து செல்லும் ஒவ்வொரு சிக்ஸர்களுக்கும் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். 






 இதற்கு, விளையாட்டாக பதில் அளித்த யுஸ்வேந்திர சாஹல், அப்படி என்றால் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 3 டாட் பால்களை வீசினால், பந்துவீச்சாளர்களுக்கு ஒரு விக்கெட் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்க, இதைப்பார்த்து முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா "ஹாஹஹா" என்று ரீ-ட்வீட் செய்து இருந்தார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண