பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் முன்னேறின. இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையேயான இறுதிபோட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 


இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகள் உட்பட 170 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். பெண்கள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், தொடர் நாயகி விருதை தட்டிச் சென்றார்.






இந்நிலையில், ஐசிசி ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறது. அதில் அலீசா ஹீலி, அவரது கணவரும் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளருமான மிட்சல் ஸ்டார்க் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் ஸ்டார்க், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அதனை அடுத்து, இப்போது நடந்து முடிந்திருக்கும் பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று, அலீசா ஹீலி தொடர் நாயகி விருதை பெற்றிருக்கிறார். 






இதை, ‘Couple Goals' என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கணவன் - மனைவியான ஸ்டார்க், அலீசா ஹீலி தங்களது கிரிக்கெட் பயணத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், வெற்றி தோல்விகளின்போது உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். இந்த சாம்பியன்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண