இந்திய கிரிக்கெட் அணி:



ஐசிசி தரவரிசை பட்டியலில்  ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் முதல் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. ஆனால், ஐசிசி தொடர்களில் நடைபெறும் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. 


அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பின்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணி கடந்த 10 ஆண்டுகலாக எந்தவொரு ஐசிசி தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது.


இந்நிலையில், இந்திய அணிக்கு திறமை இருந்தாலும் திடமான மனநிலை இல்லாததே நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைவதற்கு காரணமாக இருக்கிறது என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.


நாக் அவுட் தோல்வி:


இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், “ இந்திய அணி அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த அணியில் நானும் இருந்தேன். அதேநேரம், இனி வரும் காலங்களில் நாம் சிறப்பாக விளையாடுவோம்.


 


ஆலோசகராக விரும்புகிறேன்:


ஆஸ்திரேலிய அணி 6 உலகக் கோப்பைகளை வென்றுள்ள நிலையில் நம்முடைய அணி 2 உலகக் கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது. எனவே சாம்பியன்ஷிப்பை நாம் எப்படி வெல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


முக்கியமாக அழுத்தமான தருணங்களில் நாம் மனதளவில் சரியான முடிவுகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஆலோசகராக  இருக்க நான் விரும்புகிறேன்.


இளம் வீரர்களுக்கு அழுத்தமான சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நம் அணியில் அழுத்தமான சூழல்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர்களும் இருக்கிறார்கள்.  ஆனால்,பெரிய போட்டிகளில் நாம் மனதளவில் சவால்களை சந்திக்கிறோம்”என்று கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!


 


மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலியை யார் என்று கேட்ட ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்... வீடியோ உள்ளே!