அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இவருக்கென்று தனி ரசிகப் பட்டாளமே இருக்கிறது. அதேபோல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 256 மில்லியன் பின்தொடர்பவர்கள் பெற்றிருக்கும் இவர், உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இவர் இருந்தாலும், இவரை தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அதிலும், விளையாட்டுத்துறையை சேர்ந்த வீரர் ஒருவரே விராட் கோலியை தனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.
IShowSpeed என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் பிரபல யூடியூபரான டேரன் ஜேசன் வாட்கின்ஸ் ( Speed) அண்மையில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோவிடம் நேர்காணல் ஒன்றை எடுத்துள்ளார். இந்த நேர்காணலின்போதுதான் விராட் கோலியை அவர் யார் என்று கேட்டுள்ளார்.
விராட் கோலி யார்?
ஸ்பீட் (Speed) மற்றும் ரொனால்டோ இடையே நடைபெற்ற உரையாடலை பார்ப்போம்:
Speed: “உங்களுக்கு விராட் கோலியை தெரியுமா?”
ரொனால்டோ: ”யார்?”
Speed: ”இந்திய வீரர் விராட் கோலி”.
ரொனால்டோ: "இல்லை."
Speed: “உங்களுக்கு விராட் கோலியை தெரியாதா?”
ரொனால்டோ: "அவர் என்ன? ஒரு வீரரா?”
Speed: “அவர் ஒரு கிரிக்கெட் வீரர்.”
ரொனால்டோ: ”அவர் இங்கு மிகவும் பிரபலமாக இல்லை.”
Speed: “ஆமாம். அவர் சிறந்தவர். இந்த நண்பரை நீங்கள் பார்த்ததில்லையா?” (கோலியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி)
ரொனால்டோ: "ஆம், நிச்சயமாக நான் அவரைப் பார்த்திருக்கிறேன்" என்றார்.
இந்த நேர்கணால் அண்மையில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தனக்கு சச்சின் டெண்டுகரை யார் என்றே தெரியாது என்று கூறி இந்திய ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கணிப்பு!
மேலும் படிக்க: Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!