Yuvraj-Hazel Became Parents: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுரராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை இணையத்தில்  பகிர்ந்துள்ளனர். 


இந்த புகைப்படத்தில் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹேசல் அவர்களின் இரண்டாவது  குழந்தை ஆராவுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் முதல் குழந்தை ஓரியன் கீச் சிங்கும் உள்ளது. 


தனது குடும்பத்துடனான புகைப்படத்தினை பகிர்ந்த யுவராஜ் சிங் கேப்ஷனில், தூக்கமில்லாத பல இரவுகளை நாங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் எங்கள் குட்டி இளவரசி ஆராவை வரவேற்பதில் மிகவும் குஷியாக உள்ளோம். எங்கள் மகள் வந்த பின்னர்தான் எங்கள் குடும்பம் முழுமையடைந்ததாக உணர்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 


2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை மற்றும் இந்தியாவுக்கான 2011 உலகக் கோப்பை வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்ததால், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக யுவராஜ் எப்போதும் நினைவுகூரப்படுகிறார் . இதற்கிடையில், அவரது மனைவி ஹேசல் கீச் ஒரு மாடல் மற்றும் நடிகை மற்றும் சல்மான் கான் நடித்த பாடிகார்ட் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2022 இல் தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்தனர். 






முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் (முன்னாள் கிங்ஸ் லெவன் பஞ்சாப்) கேப்டன், மூன்று வகை போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் மூன்று வடிவங்களிலும் முறையே 1900, 8701 மற்றும் 1177 ரன்கள் எடுத்தார், மேலும் 9, 111 மற்றும் 28 விக்கெட்டுகளை எடுத்தார். 2011 உலகக் கோப்பையில் அவரது ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவியது, மேலும் யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுவராஜ் ஜூன் 2019 இல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இந்நிலையில் யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் ஆகியோரின் குடும்பப் படத்திற்கு இவர்களது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் யுவராஜ் சிங் தனது மகள் ஆராவுடனும் ஹோசல் கீச் மகன் ஓரியன் கீச் சிங்குடனும் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோசமாக காணப்படும் யுவராஜ் சிங் தனது குடும்பத்துடன் இருக்கும்போது பக்காவான அப்பா மெட்டீரியலாக காணப்படுகிறார்.