முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சக கிரிக்கெட் வீரர்களும் நெட்டிசன்களும் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
முதலில் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு ஆண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இறைவனுக்கு நன்றி. நாங்கள் எங்களின் குழந்தையை வரவேற்றுள்ள் இத்தருணத்தில் நீங்கள் அனைவரும் எங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டுகிறோம். அன்புடன் ஹேசல் கீச், யுவராஜ் என்று பதிவிட்டிருந்தார்.
ஹேசல் கீச் பாலிவுட் நடிகை. சல்மான் கான், கரீனா கபூருடன் இணைந்து அவர் பாடிகார்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். 2013ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
யுவராஜ் சிங் 2007ல் டி20 உலகக் கோப்பையில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்தும் விலகினார். 2019ல் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகினார். இப்போது அவர் வெறும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
உலகக்கோப்பை வெற்றியின் உச்சத்துக்கு பின் புற்று நோய் பற்றி தெரிய வந்தது பெறும் அதிர்ச்சியாக இருந்தது. என் மகிழ்ச்சி அனைத்தையும் எடுத்துக் கொண்டது. என் வாழ்வின் இருண்ட பகுதி அது என்றே யுவராஜ் சிங்கே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
நோயிலிருந்து மீண்டு ஹேசலைக் கரம்பிடித்த அவர் தற்போது தந்தையாகி உள்ளார். அதனால் அவரது ரசிகர்களும், கிரிக்கெட் நண்பர்களும் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
கிரிக்கெட் உலகம் வாழ்த்து:
யுவராஜ் சிங், ஹேசல் கீச் தம்பதிக்கு ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், பர்வீந்தர் அவானா, முகமது கைஃப், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல் நெட்டிசன்களும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.