முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் தன்னுடைய சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர். இவர் இந்திய அணிக்காக 6 ஒரு நாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

”கபில் தேவ் தலைக்கு புல்லட்”: 

யோக்ராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கபில் தேவ் வீட்டிற்கு சென்று அவரை சுட கையில் துப்பாக்கியுடன்  போனதாகவும் தன்னை ஏன்  இந்திய அணியில் காரணம் இல்லாமல்  நீக்கினிர்கள் என்று கேட்க சென்றதாக கூறினார். 

இது குறித்து அவர் கூறியதாவது, "கபிலிடம் நான் சில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று என் மனைவி விரும்பினாள். கபில் தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று அவளிடம் சொன்னேன். நான் என் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, செக்டார் 9 இல் உள்ள கபிலின் வீட்டிற்குச் சென்றேன். அவன் தன் தாயுடன் வெளியே வந்தார். 

இதையும் படிங்க: BCCI Secretary: ஜெய்ஷா கதை ஓவர்..! பிசிசிஐ-க்கு புதிய செயலாளர், யார் இந்த தேவஜித் சைகியா? கூடுதல் விவரங்கள் உள்ளே..

நான் அவரை கடுமையாக வார்த்தைகளாக் திட்டி தீர்த்தேன் நான் உன்னால் ஒரு நண்பனை இழந்துவிட்டேன், 'நான் உங்கள் தலையில் ஒரு தோட்டாவை வைக்க விரும்புகிறேன், ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை, உன் அருகில் உன அம்மா, இங்கே நிற்கிறார்" என்று யோகராஜ் சிங் கூறினார்.

கபில் தேவ் தான் காரணம்: 

மேலும், யோகராஜ் சிங், கபில் தேவ் மற்றும் பிஷன் சிங் பேடி  செய்ட உள் அரசியல் காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கை முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: IPL 2025 Date: போடு வெடிய! ஐ.பி.எல். யுத்தம் தொடங்கும் தேதி அறிவிப்பு - எப்போது?

"பிஷன் சிங் பேடி உட்பட இவர்கள் அனைவரும் எனக்கு எதிராக சதி செய்தார்கள். நான் பிஷன் சிங் பேடியை மன்னிக்கவே இல்லை. அவர் படுக்கையில் இறந்து விட்டார். என்னை அணியில் எடுக்கவில்லை என்றவுடன் தேர்வாளர்களில் ஒருவரான ரவீந்திர சாதாவிடம் பேசினேன். அவர் என்னிடம் கூறினார் பிஷன் சிங் பேடி ( தலைமை தேர்வாளர்) என்னை சுனில் கவாஸ்கரின் ஆள் என்று நினைத்ததாலும், நான் மும்பையில் கிரிக்கெட் விளையாடியதாலும் கவாஸ்கருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால் என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை" என்று அவர்  கூறினார்.