இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைப்பெறும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. 

ஜெய்ஸ்வால் டக் அவுட்:

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கினர். இந்த போட்டியின் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச வந்தார். வழக்கம் போல ஜெய்ஸ்வால் முதல் சந்திக்க தயாரானார். ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் மிட்செல் ஸ்டார்க் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். அவர் ஆட்டமிழந்த வீடியோ காட்சியை கீழே காணலாம். 

வம்பிழுத்த ஜெய்ஸ்வால்:

பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசிய போது பந்து ரொம்ப பொறுமையாக வீசுறீங்க என்று ஸ்டார்க்கிடம் ஜெய்ஸ்வால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. வழக்கமாக ஆஸ்திட்ரேலிய வீரர்கள் தான் எதிரணி வீரர்களை வம்பிழுப்பர், ஆனால் கடந்த போட்டியில் ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: Jasprit Bumrah : போர்க்கதை ஆயிரம்.. இன்னும் ஒரு விக்கெட் தான்.. சாதனைக்கு அருகில் பும்ரா!

இது குறித்து மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ட போது ஜெய்ஸ்வாலுக்கு ஒரே மாதிரியான பந்தை  வீசினேன், அவர் ஒரு பந்தை டிஃபென்ஸ் ஆடினார், அடுத்து அதே பந்தை தூக்கி சிக்சர் விளாசினார். அவர் நிச்சயம் வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த வீரராக இருப்பார் என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார். 

இந்த நிலையில் தான் மிட்செல் ஸ்டார்க் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.