இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டாஸ்சை வென்ற இந்தியா:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியின் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. ரோகித் ஷர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரின் வருகை இந்தியாவின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா நடுவரிசையில் களமிறங்க உள்ளதாகவும், கே.எல் ராகுல் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த போட்டியில் டாஸ்சை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இப்போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஹேசில்வுட் காயம்:
மறுமுனையில், காயம்பட்ட சிங்கமாக உள்ள ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்குள் பிளவு ஏற்ப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் பேசிய நிலையில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் இதனை மறுத்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் களமிறங்கவுள்ளார்.
இதையும் படிங்க: IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
வெற்றி-தோல்வி இதுவரை:
ஆஸ்திரேலியா 12 பகல்-இரவு டெஸ்டுகளில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரே தோல்வியை சந்தித்தது. மறுபுறம், இந்தியா இதுவரை நான்கு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளனர், ஒன்றில் தோல்வியடைந்துள்ளனர். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடிலெய்டில் நடந்த ஒரே டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
நேரடி ஸ்ட்ரீமிங் விவரங்கள்:
இப்போட்டி அடிலெய்டில் உள்ளஅடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். இப்போட்டியை ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றுக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இப்போட்டியை ரசிகர்கள் இப்போட்டியை நேரலையாக பார்க்கலாம்.
இந்திய அணி விவரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(wk), ரோஹித் சர்மா(c), ரவி அஷ்வின், நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா
ஆஸ்திரேலிய விவரம்:
ஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(w), பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்