ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டி:


டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது சுப்மன் கில் தலைமையிலான இள வீரர்கள் படை. அதன்படி, அங்கு நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன்படி முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.  ஆனால் அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.  


அதிக ரன்கள் குவித்த வீரர்:


இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் களம் இறங்கி 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு சாதனையை படைத்து இருக்கிறார். அதாவது 2024 ஆம் ஆண்டில் 36 ரன்கள் குவித்தார். இதை அடுத்து அவர் 2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 848 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்அகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் ஜெய்ஸ்வால். 


இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் 9 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 848 ரன்களை குவித்திருக்கிறார். இதில் அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 740 ரன்கள் குவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு 3 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 108 ரன்கள் குவித்துள்ளார்.


இதில் இரண்டு இரட்டை சதம் மற்றும் நான்கு அரைசதம் அடங்கும். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 2024 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 27 இன்னிங்ஸ்களில் 844 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 22 இன்னிங்ஸ்களில் விளையாடி 833 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Gautam Gambhir: புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன் உள்ள சவால்கள் என்னென்ன? ஓர் அலசல்


மேலும் படிக்க: IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டி.. இந்திய அணி அசத்தல் வெற்றி!