WTC 2025 Points Table Updated: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து, இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நீண்ட நாட்களாக வகித்து வந்த முதலிடத்தை இந்திய அண் இழந்துள்ளது. அதன்படி. இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
நிலை
|
அணிகள்
|
போட்டிகள் |
புள்ளிகள்
|
PCT
|
|||
போட்டி | வெற்றி | தோல்வி | டிரா | ||||
1 | ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 90 | 62.5 |
2 | இந்தியா | 14 | 8 | 5 | 1 | 98 | 58.33 |
3 | இலங்கை | 9 | 5 | 4 | 0 | 60 | 55.56 |
4 | நியூசிலாந்து | 11 | 6 | 5 | 0 | 72 | 54.54 |
5 | தென்னாப்பிரிக்கா | 8 | 4 | 3 | 1 | 52 | 54.16 |
6 | இங்கிலாந்து | 19 | 9 | 9 | 1 | 93 | 40.79 |
7 | பாகிஸ்தான் | 10 | 4 | 6 | 0 | 40 | 33.33 |
8 | வங்கதேசம் | 10 | 3 | 7 | 0 | 33 | 27.5 |
9 | மேற்கிந்திய தீவுகள் | 9 | 1 | 6 | 2 | 20 | 18.52 |
இந்திய அணிக்கு பின்னடைவு:
ஆஸ்திரேலியா (2004) மற்றும் இங்கிலாந்து (2012) ஆகிய அணிகளை தொடர்ந்து, 21 ஆம் நூற்றாண்டில் (ஜனவரி 1, 2001 முதல்) இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்த மூன்றாவது அணியாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா WTC தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. அதாவது இந்தியாவின் வெற்றி சராசரி 58.33 ஆகு சரிய, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை (62.5) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவிற்கு இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?
ரோகித் சார்மா தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தங்கள் சொந்த முயற்சியின் பேரில் அடைய, மீதமுள்ள ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வி அடைய கூடாது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, 5-0 என கைப்பற்றுவதன் மூலம், இந்தியா 158 புள்ளிகள் மற்றும் 69.29 என்கிற சராசரி வெற்றி விகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் பிடிக்க முடியும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நவம்பர் 22ம் தேதி தொடங்கி. அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (WK), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), அஷ்வின், ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
இருப்பு: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது