உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி மூன்று தொடர்களில், இறுதி நான்கு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. கடந்த வாரம் இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது இடத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இறுதி இடத்திற்கான போட்டியில் இரண்டு அணிகள் மட்டுமே உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் நான்கு போட்டிகளில் ஒன்றிற்கு எந்த வித மதிப்பும் இருக்கப்போவதில்லை.
ஏனெனில் தென்னாப்பிரிக்க அணியும் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டி துவங்கும் அதே நாளில் தொடங்கும் இலங்கை-நியூசிலாந்து தொடரின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி இடம் தீர்மானிக்கப்படும் என்பதை இது குறிக்கிறது. எனவே இன்று அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி இதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த வகையில் இந்தியாவின் வாய்ப்புகள் எப்படி உள்ளன?
முதல் போட்டியாளர் ஆஸ்திரேலியா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்ற பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. ஆனால் முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டு பெரிய தோல்விகளை தழுவ, இந்தியா முன்னேறியது. இந்தூரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா வெற்றியுடன் மீண்டு இறுதிப்போட்டியில் முதல் ஆளாக கால் வைத்தது.
இலங்கையா? இந்தியாவா?
WTC புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 68.52 புள்ளி சதவிகிதத்துடன் தங்கள் இடத்தை அடைத்தனர். WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இந்தியா WTC புள்ளிகள் பட்டியலில் 60.29 PCT உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் ஆசிய போட்டியாளர்களான இலங்கையும் இந்த ரேஸில் உள்ளது. இலங்கை அணி மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்தியா தகுதி பெறும் வாய்ப்புகள்
- இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்தியா வெற்றி பெற்றால், இந்தியா தான் இறுதிப்போட்டியின் இரண்டாவது போட்டியாளர்.
- இந்தியா டிரா செய்தால்... இந்தியாவின் புள்ளிகளில் 52.9 ஆக குறையும், ஆனால் இலங்கை நியூசிலாந்தை இரண்டு போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்யத் தவறினால், அப்போதும் இந்தியா தான் வெற்றிபெறும். அதாவது இலங்கை ஏதாவது ஒரு போட்டியில் டிரா செய்தாலோ, தோற்றாலோ, இந்தியா தகுதி பெரும்.
- இந்தியா தோற்றால்... இலங்கை அணி நியூசிலாந்தை இரண்டு போட்டிகளிலும் வெல்லக்கூடாது. இரண்டு போட்டியிலும் டிரா செய்தாலும் இந்தியா தகுதி பெரும்.