லண்டனில் உள்ள கென்னிங்டனில் உள்ள ஓவல் மைதானம் இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். இந்த ஸ்டேடியம் 27,500 அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கைகள் கொண்டது. 1845 இல் நிறுவப்பட்ட இந்த மைதானத்தில் 1880 செப்டம்பரில் த்ரீ லயன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே சர்வதேச டெஸ்ட் போட்டியை நடத்தப்பட்டது. 




இம்மைதானம் சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் தாயகமாக உள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவின் பில்லி முர்டோக் கிரிக்கெட்டில் அடித்த முதல் இரட்டை டெஸ்ட் சதம் போன்ற சில வரலாற்று கிரிக்கெட் நிகழ்வுகளை சந்தித்த முக்கியமான மைதானமாக உள்ளது. ஓவலில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 343 ஆகும், அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸில் 304, 238 மற்றும் 156 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. 


இதைக் கருத்தில் கொண்டு, கென்னிங்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் சில சுவாரஸ்யமான பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.




ஓவல் மைதானமும் டெஸ்ட் போட்டிகளும்


அதிகபட்ச ஸ்கோர் (அணி): இந்த மைதானத்தில் ஒரு டெஸ்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை 1938 இல் இங்கிலாந்து எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, லியானார்ட் ஹட்டனின் 364 ரன்களுக்கும், மாரிஸ் லேலண்ட் மற்றும் ஜோ ஹார்ட்ஸ்டாஃப் ஆகியோரின் சதங்களும் இணைந்து இங்கிலாந்து அணி 903/7 ரன்களை எடுத்தது.  இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது இங்கிலாந்து அணி.


குறைந்த ஸ்கோர் (அணி): இந்த மைதானத்தில் 1896ல் ஆஸ்திரேலியா அணி எடுத்தது. குறைந்த ஸ்கோர் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 111 என்ற இலக்கை துரத்தும்போது வெறும் 44 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.


ஒட்டுமொத்த அதிக ரன்கள் (தனிநபர்): ஓவல் மைதானத்தில் லியோனார்ட் ஹட்டன் 1,521 ரன்கள் எடுத்தார், இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைதானத்தில் அடித்த தனிநபரின் அதிக ரன்கள். ஹட்டன் 1,521 ரன்களை 89.47 சராசரியில் அடித்தார். இந்த மைதானத்தில் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அவர் அடித்துள்ளார்.


அதிக விக்கெட்டுகள்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் இயன் போத்தம் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 11 போட்டிகளில் 26.51 சராசரி மற்றும் 3.61 என்ற பொருளாதாரத்தில் 52 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த மைதானத்தில் ஒருமுறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை (இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து) வீழ்த்திய போத்தம் மூன்று முறை நான்கு விக்கெட்டுகளையும் இரண்டு ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: இந்த மைதானத்தில் இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தவர் இங்கிலாந்து அணியின் லியோனார்ட் ஹட்டன் தான்.  அவரின்  364 ரன்களே இந்த மைதானத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். ஹட்டனின் ஆட்டத்தால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 


சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்: 


இங்கிலாந்து பந்துவீச்சாளர் டெவோன் மால்கம் இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்தார், அவர் 1994 இல் ஒரு டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க உதவினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவரது 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதற்கிடையில், இலங்கையின் முத்தையா முரளிதரன் , 1998ல் இங்கிலாந்துக்கு எதிராக 16/220 என்று டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 155 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார், அதேபோல்  இரண்டாவது இன்னிங்சில் 65 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகல் கைப்பற்றினார். மேலும் இந்த போட்டியில் இலங்கை, இங்கிலாந்தை 10 வித்தியாசத்தில் வீழ்த்தியது.




அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:


இந்த மைதானத்தில் 1934ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பில் போன்ஸ்ஃபோர்ட் மற்றும் சர் டொனால்ட் பிராட்மேன் இணைந்து அதிக பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். முதல் இன்னிங்சில் 701 ரன்களை எடுத்ததால், பில் போன்ஸ்ஃபோர்ட் 266 ரன்களும்,  சர் டொனால்ட் பிராட்மேன்  244 ரன்களும் எடுத்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப் மூலம் ஆஸ்திரேலியா 562 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.