IND vs AUS டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC)இறுதிப் போட்டிக்கான சூழல் மாறிவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகள் மட்டுமே WTC இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு, தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு  இரண்டாவது இன்னிங்ஸில் 76 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி இந்தூர் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா PCT 60 ஆகக் குறைந்துள்ளது, இருப்பினும், WTC புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை 53.0 PCT உடன் 3வது இடத்தில் உள்ளது


3வது டெஸ்டில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா WTC தரவரிசையில் 69.0 PCT உடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் WTC இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது இடத்தை உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா 4வது டெஸ்டில் தோற்றாலும், தொடரில் 3-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாலும், 65.0 என்ற  PCT யைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கும். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்தியாவுக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இந்திய அணி WTC இறுதிப் போட்டியில் தங்களுடைய இடத்தை உறுதிப்படுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.


இந்தியா ஆஸ்திரேலியாவை 3-1 என வீழ்த்தினால்


பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தால், இந்தியா 63.0 என்ற  PCT அளவில் புள்ளிகள் பட்டியலில் 2வது அணியாக முன்னேறும். இதனால், ஆஸ்திரேலியாவின் PCT 65.0 ஆகக் குறையும். 


அதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை 2-0 என்ற வெற்றியைப் பெற்றாலும், அது இந்திய அணியை பாதிக்காது. ஏனெனில் இலங்கை PCT 61.0 உடன் அந்த தொடரை முடித்துக் கொள்ளும். மேலும் WTC அட்டவணையில் 3வது இடம் பிடிக்கும். எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்தியா 2-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால்


இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் டிராவில் முடிந்து, இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றினால், WTC இறுதிப் போட்டியில் இருந்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்  வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும். அதாவது இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படவேண்டுமானால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வெல்லாமல் இருக்க வேண்டும்.  ஒருவேளை இலங்கை தொடரை முழுமையாக கைப்பற்றுமென்றால் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறும். இரண்டு போட்டிகளையும் வென்ற இலங்கை அணியின் WTC புள்ளிகள் பட்டியலில் 61.0 PCTயாக உயரும். அதேபோல் IND vs AUS தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் இந்தியாவின் PCT 59.0 ஆக குறைந்து மூன்றாவது இடத்துக்கு பின்னடைவைச் சந்திக்கும். 




ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-2 என சமன் செய்தால்


கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவை வீழ்த்தினால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என டையில் முடிவடையும். இவ்வாறான நிலையில், நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினால், இலங்கை WTC இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியும். எவ்வாறாயினும், இலங்கை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும். 1-0 என்ற வெற்றி அல்லது 1-1 சமநிலை என போட்டி முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தை இலங்கையால் பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


எனவே, WTC இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் தகுதியானது இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரின் முடிவைப் பொறுத்தது. இலங்கை வெளி மண்ணில் விளையாடுவதால், தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்வது இலங்கைக்கு கடினமாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இப்போதும் கூட பிரகாசமாகத் தான் உள்ளது.