WTC Final 2023: கிரிக்கெட் உலகமே தற்போதுதான் ஐபிஎல் கொண்டாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அடுத்த பரபரப்புக்கு கிரிக்கெட் உலகம் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே இரு அணிகளிலும் தலைசிறந்த வீரர்களை அணி நிர்வாகங்களும் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடர் முடிந்த கையுடன் இந்திய அணி லண்டனுக்கு விரைந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ அதற்கு முன்னரே சென்று லண்டனின் காலநிலை, மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். 


கடந்த முறையே இறுதிப் போட்டி வரைக்கும் வந்து கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை டைட்டிலை வெல்ல தீர்மானமாக இருக்கிறது. காயம் காரணமாக இந்திய அணியின் ஜாம்பவான்கள் பலர் ஓய்வில் இருந்தாலும், திறமையான இளம் வீரர்களையும் அணியில் கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித், நேற்று அதாவது மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளது, மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 


அவர் கூறியதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓவல் மைதானத்தினைப் பொறுத்தவரையில் போக போக சுழற்பந்துக்கு மிகவும் சாதகமாக இருக்கப்போகிறது. மேலும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றுவிட்டால், போட்டி வேறுமாதி செல்லும். பார்டர் - காவஸ்கர் தொடரின் போது இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரி சூழலை எதிர்கொண்டோமோ, அதேமாதிரி தான் இங்கும் இருக்கப்போகிறது. கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் அழகான இடம் ஓவல். இங்கு வேகத்துடன் கூடிய பவுன்சும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 


மேலும், அவர் கூறியது தான் மிகவும் சுவாரஸ்யமானதாக பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் முதல் நாளில் இருந்தே மைதானத்தில் ரசிகர்கள் அதிக அளவில் இருப்பார்கள். அதில் மிகவும் அதிகமாக, இந்திய அணிக்கான ரசிகர்கள்  தான் அதிகமாக இருப்பார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான துல்லளான போட்டியாக இருக்கப்போகிறது இந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்க காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். 


அப்போது அவருடன் இருந்த, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர், ஹோசில் வுட் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், இன்னும் ஒரு வாரம் நேரம் உள்ளது, நான் அதற்குள் முழுவதுமாக தயாராகிவிடுவேன் என நம்புகிறேன் என அவர் கூறுகிறார். வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், டெஸ்ட் தரவரிசையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.