அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு காயம் அடைந்த கே.எல்.ராகுலுக்கு பதிலாக பிசிசிஐ இஷான் கிஷன் பெயரை அறிவித்தது. சிறப்பான பார்மில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்காததது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவிற்காக விருத்திமான் சஹா கடந்த 2021 ம் ஆண்டு கடைசியாக 2021 டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜிங்க்யா ரஹானேவைப் போலவே, சஹாவும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ட்விட்டர்வாசிகள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது அதிருப்திகளை வெளிபடுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தேர்வுக் குழுவின் தலைவர் சிவசுந்தர் தாஸ், “ கே.எஸ்.பாரத்திற்கு பிறகு இந்திய அணிக்கு முன்பில் இருந்தே இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆப்ஷனாக இஷான் கிஷன் இருந்தார். அதன் காரணமாகவே இந்திய அணியின் இடம்பெற்றார்” என தெரிவித்தார்.
விக்கெட் கீப்பர்கள்:
இஷான் கிஷன்:
இஷான் கிஷன் இந்திய அணிக்காக இதுவரை 14 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இன்னும் அறிமுகமாகவில்லை. இஷான் கிஷன் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 38.76 சராசரியுடன் 2985 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்களும் அடங்கும். இருப்பினும், சமீபத்திய ரஞ்சி டிராபியில், இஷான் கிஷன் வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ஃபராஸ் கான்:
ரஞ்சிக் கோப்பையின் 2022/23 சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய சர்ஃபராஸ் கான், ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 556 ரன்கள் எடுத்தார். இவர் நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியில் அழைப்பிற்காக காத்திருக்கிறார்.
கே.எல். ராகுலின் மாற்று வீரர் மற்றும் ஸ்டாண்ட்-பை பட்டியலில் சர்ஃபராஸ் மற்றும் சஹா இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல், உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகிய மூன்று வீரர்கள் காத்திருப்பு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில் , சேதேஷ்வர் புஜாரா , விராட் கோலி , அஜிங்க்யா ரஹானே , கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்).
காத்திருப்பு வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார்