உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2023 Final) இறுதிப் போட்டியில் இந்தியா தனது கடந்தகால தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல் மைதானத்தில் வெற்றிபெற முடியும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். 


2021-இல் நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் தடைபட, போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. 


நாசர் ஹூசைன் ஐசிசி ரிவ்யூவில்,  ”இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் சொந்த மண்ணில் நடந்த சமீபத்திய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு WTC இறுதிப் போட்டியில் அவர்கள் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ரோஹித் சர்மா தலைமையிலான அணி இந்த முறை கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


"இந்தியா, ஆஸ்திரேலியாவில் காட்டியது போல், எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஹுசைன் ஐசிசி ரிவ்யூவில் பேசியுள்ளார்.


அந்த ரிவ்யூவில் "வானிலை நன்றாக இருந்தால்  இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு சீமர்கள் அதாவது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும்  மூன்றாவது சீமராக (ஷர்துல்) தாக்கூரை ப்ளேயிங் லெவனில் சேர்த்துக்கொள்வது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும், ஓவல் மைதானத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது. அவர்கள் கடைசியாக இங்கிலாந்தை ஒரு சிறந்த போட்டியில் வீழ்த்தினர். மேலும் உலகமே உற்று நோக்கும் உலக்டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற பொருத்தமான இடம் ஓவல் தான் எனவும் நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்


“நான் ஜடேஜா மற்றும் அஷ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பேட்டிங் இந்திய அணிக்கு உதவும் என நினைக்கிறேன்" எனவும் அவர் கூறினார்.  "இவர்கள் பேட்டிங் ஆர்டரில் எங்கு களமிறங்கினாலும் பொறுப்புடன் விளையாடுவார்கள்” என கூறியுள்ளார். 


"கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜா அழகாக பந்து வீசினார். அவர் பந்துவீசும்போது சிறப்பாக  ரிவர்ஸ் ஸ்விங் வீசியதை பார்க்க முடிந்தது. அதேபோல் சிறந்த பந்துவீச்சாளர்கள் பொதுவாக எல்லா நிலைகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்களாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் வேகப்பந்து வீச்சாளர்களான, பேட் கம்மின்ஸ் மற்றும் முகமது ஷமியைப் பார்க்கும் இவர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் சுவரஸ்யமாக இருக்கப்போகிறது" எனவும் கூறியுள்ளார். .


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி போட்டி மற்றும் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 கோப்பையை வெல்வதுடன் ஐசிசி நடத்திய மூன்று உலகத்தொடர்களையும் வென்ற அணி என்ற பெருமையை தனதாக்கும்.