ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டியானது வருகின்ற ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 


உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணிக்கு பேட் கம்மின்ஸும் தலைமை தாங்குகின்றனர். 


இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் லண்டனில் உள்ள இந்திய அணியின் பயிற்சி முகாமில் புதிய ஸ்பான்ஸர் கிட்டான அடிடாஸ் டி சர்ட் அணிந்து இணைந்தனர். இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதில், ”வருகை எச்சரிக்கை! விராட் கோலி, புஜாரா மற்றும் உனத்கட் ஆகியோர் பயிற்சிக்கு வருவதை காணலாம்” என தலைப்பில் பதிவிட்டு இருந்தது. 


ஐபிஎல் 2023 சீசனில் நல்ல பார்மில் இருந்த கோலி, 14 போட்டிகளில் 639 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேபோல், புஜாரா இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப்பின் பிரிவு இரண்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி நிலையில் அப்படியே இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கவுண்டி லீக்கில் 8 இன்னிங்ஸ்களில் 545 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் விளையாடி வந்தபோது காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவரும் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பினார். 










மேலும் முகமது சிராஜ், அக்சார் பட்டேல், உமேஷ் யாதவ், சர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட புகைப்படத்தையும் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 






கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டது. இதில், இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி:  


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, இஷான் கிஷன், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.


WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: 


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டோட் மர்பி, மேத்யூ , ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்ன்