WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை

WPL 2025 Schedule: மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை, அணிகளின் வீராங்கனைகள் உள்ளிட்ட, மொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

WPL 2025 Schedule: மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் மூன்றாவது சீசன் வரும் பிப்ரவரி 14ம் தேதி தொடங்க உள்ளது.

Continues below advertisement

மகளிர் பிரீமியர் லீக் 2025:

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆடவருக்கான ஐபிஎல் தொடர் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, மகளிர் பிரீமியர் லீக் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த 20 ஓவர் போட்டிகள் இந்தியாவை கடந்து, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கின் மூன்றாவது எடிஷன் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த லீக்கின், இறுதிப்போட்டி மார்ச் 15ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் எடிஷனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது எடிஷனில் பெங்களூர் அணி பட்டம் வென்றது. இதனால் நடப்பாண்டு பட்டம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2025 - போட்டி நடைமுறை

வழக்கம்போல் இந்த சீசனிலும், 5 அணிகளும் ரவுண்ட் - ராபின் முறையில் லீக் போட்டியில் மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள், அரையிறுதியில் மோதி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். குஜராத்  வதோத்ராவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும், லீகின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூர் அணியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் அட்டவணை, அணிகளின் வீராங்கனைகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட, மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

5 அணி விவரங்கள்:

குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி (c, wk), ஆஷ்லீக் கார்ட்னர், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, லாரா வால்வார்ட், தனுஜா கன்வர், ஷப்னம் ஷகில், மேக்னா சிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, மன்னத் காஷ்யப்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜார்ஜியா வேர்ஹாம், ஹீதர் கிரஹாம், எலிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ் (வாரம்), ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஹீதர் நைட், ஏக்தா பிஷ்ட், கிம் கார்த், சப்பினேனி மேகனா, சோஃபி மோலினக்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, அனாபெல் சதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், ஷஃபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசானே கப், சினேகா தீப்தி, மின்னு மணி, தனியா பாட்டியா (wk), டைட்டாஸ் சாது

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமேலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, அமன்ஜோத் கவுர், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், க்ளோ ட்ரையன், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஜிந்திமணி கலிதா, ஷப்னிம் இஸ்மாயில், சஜீவன் சஜனா, அமந்தீப் கவுர்

UP வாரியர்ஸ்: சினெல் ஹென்ரி (wk), சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், சாமரி அதபத்து, விருந்தா தினேஷ், டேனி வயட், பூனானு க்மாத்தெம், பூனம் க்மாத்தெம்

போட்டி நடைபெறும் மைதானங்கள்:

நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக் ஆனது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம், லக்னோவில் உள்ள ஏகனா மைதானம், மும்பையில் உள்ள பர்போர்ன் மைதானம், குஜராத்தில் உள்ள வதோத்ரா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. இறுத்ப்போட்டி மும்பையில் உள்ள பர்போர்ன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் - போட்டி அட்டவணை

WPL 2025 போட்டிகள் பட்டியல்
தேதி போட்டி தொடக்க நேரம் இடம்
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 15, சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 16, ஞாயிறு குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ் மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 17, திங்கள் டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 18, செவ்வாய் குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 19, புதன் யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மாலை 7:30 மணி பிசிஏ மைதானம், வதோதரா
பிப்ரவரி 21, வெள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 22, சனி டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 24, திங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 25, செவ்வாய் டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 26, புதன் மும்பை இந்தியன்ஸ் vs உபி வாரியர்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 27, வியாழன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
மார்ச் 1, சனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் மாலை 7:30 மணி எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
மார்ச் 3, திங்கள் UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மாலை 7:30 மணி ஏகானா மைதானம், லக்னோ
மார்ச் 6, வியாழன் யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மாலை 7:30 மணி ஏகானா மைதானம், லக்னோ
மார்ச் 7, வெள்ளி குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மாலை 7:30 மணி ஏகானா மைதானம், லக்னோ
மார்ச் 8, சனி யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 மணி ஏகானா மைதானம், லக்னோ
மார்ச் 10, திங்கள் மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மாலை 7:30 மணி சிசிஐ, மும்பை
மார்ச் 11, செவ்வாய் மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாலை 7:30 மணி சிசிஐ, மும்பை
மார்ச் 13, வியாழன் எலிமினேட்டர் - லீக் கட்டத்தில் 2வது vs லீக் கட்டத்தில் 3வது மாலை 7:30 மணி சிசிஐ, மும்பை
மார்ச் 15, சனி இறுதிப் போட்டி - லீக் கட்டத்தில் முதலிடம் vs எலிமினேட்டர் வெற்றியாளர் மாலை 7:30 மணி சிசிஐ, மும்பை

நேரடி ஒளிபரப்பு விவரங்கள்:

போட்டியின் நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடி தளங்களில் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

டிக்கெட் விலை:

 WPL 2025 சீசன் மூன்றிற்கான டிக்கெட் விற்பனை ஜனவரி 31 அன்று மாலை 6 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கியது. தற்போது, ​​வதோதரா மற்றும் பெங்களூருவில் நடைபெறும் முதல் கட்ட போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன. டிக்கெட் விலைகள் நகரம், இடம் மற்றும் இருக்கை தேர்வைப் பொறுத்து மாறுபடும். வதோதராவில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.100 இலிருந்து தொடங்குகிறது. பெங்களூருவில் போட்டிக்கான இருக்கை விருப்பத்தைப் பொறுத்து விலைகள் ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கும்.

டிக்கெட் வாங்குவது எப்படி?

WPL 2025க்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் தளமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) BookMyShow உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் பல ஆன்லைன் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம்:

  • அதிகாரப்பூர்வ WPL வலைத்தளம்: www.wplt20.com
  • WPL செயலி: ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
  • BookMyShow வலைத்தளம் bookmyshow.com அல்லது BookMyShow செயலி (ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது)
Continues below advertisement