2008-09 ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச அணியும் மும்பை அணியும் நேருக்கு நேர் மோதின. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது சிறுவன் தனது முதல் தர கிரிக்கெட்டில் சச்சினை டக் அவுட்டாக்கி அனைவரையும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தினன். பின்னர் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தியா தனது அடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள். விரைவில் இந்தப் பத்தொன்பது வயது சிறுவன் தனது 22 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது முத்திரை பதித்தார்.
ஸ்விங் கிங்:
அந்த சின்னப்பையன் வேறு யாரும் இல்லை, ஸ்விங் கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார் தான். தனது 23வது பிறந்தநாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு, புவனேஷ்வர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் தனது ஒருநாள் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவர் பாகிஸ்தானின் முகமது ஹபீஸை தனது ட்ரேட் மார்க் இன்-ஸ்விங் பந்தில் போல்டாக்கினார். எல்லா இடங்களிலும் புவியைப் பற்றிய விவாதம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்று அரைசதங்களை அடித்து சாதனை புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார் புவனேஷ்வர் குமார்.
இதையும் படிங்க: WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
இளமை காலம்:
புவி உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பிப்ரவரி 5, 1990 அன்று பிறந்தார். அவரது தந்தையின் பெயர் கிரண் பால் சிங், அவர் உத்தரபிரதேச காவல்துறையில் துணை ஆய்வாளராக இருந்தார். அவரது தாயார் பெயர் இந்திரேஷ் சிங், அவர் ஒரு இல்லத்தரசி. அவரது மூத்த சகோதரி ரேகா, விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தை உணர்ந்து, அவருக்கு 12 வயதாக இருந்தபோது பயிற்சிக்காக அழைத்துச் சென்றார். புவனேஷ்வர் குமாரின் சிறுவயது பயிற்சியாளர் சஞ்சய் ரஸ்தோகி அவரது திறமையை அடையாளம் கண்டு அவருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார். புவனேஷ்வர் குமாரின் குழந்தைப் பருவம் விக்டோரியா பூங்காவில் கழிந்தது, அதுவே அவரது பயிற்சி மைதானமாக இருந்தது.
புவனேஷ்வர் குமார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
- அவர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பிப்ரவரி 5, 1990 அன்று பிறந்தார்.
- அவர் ஒரு வலது கை பந்து வீச்சாளர் மற்றும் பேட்டர்.
- புவனேஷ்வர் குமார் டிசம்பர் 30, 2012 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
- புவனேஷ்வர் குமார் பிப்ரவரி 22, 2013 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
- அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவர்.
- இரண்டு சீசன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக அவர் ஊதா நிற தொப்பியைப் பெற்றுள்ளார்.
- இந்திய அணிக்காக புவி டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 141 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
- அவர் டெஸ்ட் போட்டிகளில் 552 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 552 ரன்களும், டி20 போட்டிகளில் 67 ரன்களும் எடுத்துள்ளார்.
- T20 போட்டிகளில் புவியின் சிறந்த பந்துவீச்சு 4 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் ஆகும்.
- உள்ளூர் கிரிக்கெட்டில் சச்சினை டக் அவுட்டாக்கிய ஒரே பந்து வீச்சாளர் புவனேஷ்வர்.
- புவனேஷ்வர் குமார் இந்தியாவுக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2018 ஜனவரியில் விளையாடினார்.
- புவனேஷ்வர் குமார் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஜனவரி 2022 இல் விளையாடினார்.
- புவி தனது கடைசி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2022 இல் விளையாடினார்.