WPL 2025 Auction: பிசிசிஐ-யின் அடுத்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் பங்கேற்க 120 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.


மகளிர் பிரீமியம் லீக் 2025 ஏலம்:


மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025-ல் பங்கேற்பதற்கான, வீராங்கனைகளின் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்தில், மொத்தம் 19 வீராங்கனைகளின் இடம் நிரப்பப்பட உள்ளன. இதில் ஐந்து இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கானது.


WPL 2025 ஏலத்தில் பங்கேற்க120 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர், இதில் 91 இந்திய வீராங்கனைகள் மற்றும் 29 சர்வதேச வீராங்கனைகள் அடங்குவர்.  இதில் அசோசியேட் நாடுகளில் இருந்து வளர்ந்து வரும் மூன்று வீராங்கனைகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 120 வீராங்கனைகளில் 30 பேர் சர்வதேச போட்டிக்ளில் விளையாடி உள்ளனர். அவர்களில்  9 பேர் இந்தியர்கள் மற்றும் 21 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.  மீதமுள்ள 90 பேர் சர்வதேச போட்டிக்ளில் விளையாடாதவர்கள் ஆவர்.  அதில் 82 பேர் இந்தியர்கள் மற்றும் 8 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாவர்.



மகளீர் பிரீமியர் லீக் ஏலம் பற்றிய முக்கிய தகவல்கள்


WPL 2025 ஏலம் எப்போது நடைபெறும்?


WPL 2025 ஏலம் டிசம்பர் 15 அன்று அதாவது இன்று நடைபெறும்.


WPL 2025 ஏலம் எங்கு நடைபெறும்?


WPL 2025 ஏலம் பெங்களூரில் நடைபெற உள்ளது.


WPL 2025 ஏலம் எப்போது தொடங்கும்?


WPL 2025 ஏலம் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்கும்.


WPL 2025 ஏலம் எந்த டிவி சேனலில் ஒளிபரப்பப்படும்?


WPL 2025 ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும்


WPL 2025 ஏலத்தை ஃபோன் அல்லது லேப்டாப்பில் நேரடியாக பார்ப்பது எப்படி?


WPL 2025 ஏல நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் ஜியோ சினிமா செயலியில் நடைபெறும்


WPL 2025 ஏலத்தை இலவசமாகப் பார்ப்பது எப்படி?


WPL 2025 ஏலத்தை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம். ஏலத்தை நேரலையில் காண நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஜியோ சினிமா செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து இலவசமாகப் பார்க்கலாம்.


அணி வாரியாக உள்ள மீதத்தொகை


டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 2.5 கோடி


மும்பை இந்தியன்ஸ் - ரூ.2.65 கோடி


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.3.25 கோடி


UP வாரியர்ஸ் - ரூ.3.9 கோடி


குஜராத் ஜெயண்ட்ஸ் - ரூ.4.4 கோடி


ஏலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய வீரர்கள்


தேஜல் ஹசாப்னிஸ், டேனியல் கிப்சன் (இங்கிலாந்து), கிம் கார்த் (ஆஸ்திரேலியா), ஹீதர் நைட் (இங்கிலாந்து), ஸ்னே ராணா, டியான்ட்ரா டாட்டின் (மேற்கிந்தியத் தீவுகள்), ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் (அயர்லாந்து), லாரன் பெல் (இங்கிலாந்து)