இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஃபினிஷர் ரிங்கு சிங், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2 படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ரிங்கு சிங்: 


இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' பாடலுகு நடனமாடிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க : கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?


வைரலான வீடியோவில் ரிங்கு சிங் அவரது நண்பர்களுடன்ன் ஜிம்மில் காணப்பட்டார். ரிங்கு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து புகழ்பெற்ற 'புஷ்பா-2' ஸ்டெப் போட்டு நடனமாடினார். முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பட பாடலுக்கு நடமாடி பல வீடியோக்களை இணையத்தளத்தில் வெளியிட்டு வைரலாகி இருந்தது.






1000 கோடி வசூல்:


டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான நிலையில், எல்லா  மொழிகளிலும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.






குறிப்பாக ஹிந்தியில் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.  முதல் நாளே ரூ.294 கோடி வசூல் சாதனை செய்த 'புஷ்பா 2' திரைப்படம் தற்போது 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ள தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.