RCB WPL: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனிலேயே பெங்களூர் அணி கோப்பையை வென்ற நிலையில், 16 ஆண்டுகளாகியும் ஆடவர் பெங்களூர் அணி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது.


கனவை நிறைவேற்றிய மகளிர் ஆர்சிபி அணி:


ஐபிஎல் தொடரில் கடந்த 16 ஆண்டுகளாக ஆடவர் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாகவும், பேட்டிங்கில் பல சாதனைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதுவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர், ரன் மெஷின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கோலி இருந்தும், அந்த அணி கோப்பையை வெல்லாததால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனிலேயே, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதனால், கோப்பை இல்லை என்ற 16 வருட ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், நேற்று வந்த மகளிர் அணி கூட கோப்பையை வென்று விட்டது. ஆனால், ஆடவர் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 


ஆடவர் ஆர்சி அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்: